திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்துள்ள லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு நித்திஷ் குமார், ரிஷி குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்குமரன், லட்சுமாங்குடி கடைவீதியில் நடத்திவந்த காய்கறிக்கடை, கொரோனாவால் கடும் நஷ்டத்தைச் சந்திக்க, கடன் தொல்லையில் சிக்கினார். அதிலிருந்து மீள்வதற் காக, நண்பர் ஒருவரின் யோசனைப்படி, குவைத்துக்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். "நல்ல வேலை. நல்ல சம்பளம் தர்றதா சொல்றாங்க. மூணு வருஷம் கண்ண மூடித் திறக்குறதுக்குள்ள ஓடிடும். குடும்பக் கஷ்டமும் தீர்ந்திடும்'' என்று குடும்பத்தினரை சமாதானப்படுத்தினார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மோகனா என்பவரிடம் ஒன்றரை லட்சம் பணம் கொடுத்து குவைத் நாட்டிலுள்ள சபா அல் அகமது சிட்டிக்கு கடந்த ஐந்தாம் தேதி வேலைக்குச் சென்றார்.

Advertisment

dd

குவைத்துக்கு சென்றதுமே வீட்டிற்கு போன் செய்து, தான் வந்துவிட்டதாகவும், வேலைக்கு உடனே அழைச்சிட்டு போறாங்க என்றும் விவரத்தைச் சொல்லியிருக்கிறார், வேலைக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு இடிஇறங்கியது போல ஆகிவிட்டது. கிளினிக்கில் வேலை எனச் சொல்லி அழைத்துவந்து, பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கச் சொல்றாங்களே என நாள் முழுவதும் அழுதுபுரண்டதோடு, அன்றிரவே மனைவியிடமும் நடந்ததைக் கூறி அழுதிருக்கிறார்.

அதைக் கேட்டு வித்யாவும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்து, ஏஜெண் டிடம் முறையிட்டுள்ளனர். முத்துக்குமரனும் குவைத்தில் உள்ள ஒட்டக முதலாளியிடம் அதுகுறித்து முறையிட, ஆத்திரமடைந்த ஒட்டக முதலாளி, முத்துக்குமரனை அடித்து உதைத்த தோடு, "இங்கேயே உன்னை கொன்று புதைச்சிடு வேன்'' என மிரட்டியிருக்கிறார். 6ஆம் தேதிவரை குடும்பத்தாரிடம் தொடர்பிலிருந்த முத்துக்குமர னின் செல்போன் அதன்பின் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது, இந்நிலையில், முத்துக்குமரன் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தகவல் கிடைக்க, குடும்பத்தினர் அதிர்ச்சியில் நொறுங்கிப்போனார் கள். அதையடுத்து, முத்துக்குமரனின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உதவும்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம், கூத்தாநல்லூர் வட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.

d

Advertisment

முத்துக்குமரனின் மனைவி வித்யா, "குடும்ப கஷ்டம் காரணமாகத்தான் குவைத்துக்கு வேலைக்கு போனார். என்னிடம் கடந்த ஐந்தாம் தேதி போனில் பேசினப்ப, 'ஏஜெண்டு என்ன ஏமாத்திட்டாங்க, சூப்பர் மார்க்கெட்டுல வேலைன்னு சொல்- அழைச்சிட்டுவந்து, ஒட்டக முதலாளிகிட்ட அதிக பணம் வாங்கிக்கிட்டு அடகு வச்சிட்டாங்க, நான் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்க்கிறேன். ரொம்ப கஷ்டமா இருக்கு'.என அழுகையை அடக்கிக்கொண்டு சொன்னார், அதற்கு நான், 'கஷ்டமாக இருந்தால் ஊருக்கு வந்து விடுங்கள்' என்று சொன்னேன். கடைசியாக கடந்த ஆறாம் தேதி என்னிடம் போனில் பேசினார். ஏழாம் தேதி அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துவிட்டதாக எனக்கு தகவல் வந்ததும், மொத்த குடும்பமும் உடைஞ்சி போனோம். எங்க குடும்பத்தின் ஆணி வேரே அவருதான். அவரை நாங்கள் இழந்து தவிக்கிறோம். இரண்டு குழந்தைகளையும் வச்சிக்கிட்டு நான் எப்படி கரை சேரப் போறேனோ, தெரியவில்லை'' என அழுது புலம்பினார்.

ஆட்சியரிடம் மனு அளித்த முத்துக்குமர னின் உறவினர் ஐயப்பனிடம் கேட்டோம். "குவைத்தில் இருந்து வந்த தகவலை உறுதிசெய்ய தூதரகத்தைத் தொடர்புகொண்டோம் ஆனால் அவர்கள் எந்த தகவலும் கொடுக்கவில்லை. பிறகு, குவைத்தில் வேலை பார்க்கும் எங்கள் பகுதியைச் சேர்ந்தவரிடம் விசாரிக்கச் சொன்னோம். ஏழாம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள னர் என்று அவர் கூறினார். வயிற்றுப் பிழைப்புக் காக வெளிநாட்டு வேலைக்குச் சென்றவரை இப்படியா சுட்டுக் கொல்வார்கள்?'' என்கிறார் கலங்கியபடியே.

ddவெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்க பொதுச்செயலாளர் முத்துப் பேட்டை கண்ணன் கூறுகையில், "போலி முகவர்களால்தான் இது போன்ற துயரங்கள் நடக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் வேலை எனக்கூறி அழைத்துச் சென்று ஊருக்கு வெளியே உள்ள பாலைவனத்தில் தகர செட்டில் தங்கவைத்து ஒட்டகம் மேய்க்க விட்டு கொடுமை செய்திருக்கின்றனர். ஒட்டகம் மேய்க்கமாட்டேன் எனப் பிடிவாதம் காட்டியதால், உணவு தண்ணீர் கூடக் கொடுக்கா மல் அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர்'' என்றார். வெளிநாடுவாழ் நலச் சங்க தலைவர் உஸ்மான் கூறுகையில், "சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் குவைத்தில் உள்ள எங்க அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு முழுமையாக விசாரித்து, அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டுவரும் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். அவரைச் சென்று பார்த்தபோது பலத்த ரத்தக்காயத்தோடு இருந்திருக்கிறார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது ஏற்கனவே உயிர்போய்விட்டது எனக் கூறி யிருக்கின்றனர்.கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும்'' என்றார்.

இந்நிலையில், குவைத் நாட்டிலிருந்து முத்துக்குமரனின் உடல், திருச்சி விமான நிலையம் வழியாக சொந்த ஊரான லட்சுமாங்குடிக்கு கொண்டுவரப்படவுள்ளது. குவைத்தில், முத்துக்குமரனைக் கொலை செய்த குவைத் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துக் குமரனை வெளிநாடு அனுப்ப ஏஜென்டாக இருந்து மோசடி செய்த, ஆந்திரா, உத்திரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.